
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் ஜூலை 18 முதல் 20 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தகவல் அறிவித்துள்ளது.
மேலும், கல்வி அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, ஜூலை 21ஆம் திகதி புதிய தவணை தொடங்கும் என தெரியவருகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
அதற்கமைய கடந்த 4ஆம் திகதி முதல் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.