4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவிக்காக சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், சீனா அதற்கு உடன்படும் என்று நம்புவதாக சீனாவுக்கான இலங்கையின் தூதுவரை மேற்கோள்காட்டி ப்ளூம்பெர்க் நியூஸ் தெரிவித்துள்ளது.
சீனாவின் கடனுக்குச் சமமான தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக கொழும்பு சீனாவிடம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கேட்பதாக பாலித கொஹொன Bloomberg க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இலங்கையின் கோரிக்கைகள் நியாயமற்ற கோரிக்கைகள் அல்ல. எனவே ஒரு கட்டத்தில் சீனா, தமது கோரிக்கைகளை ஏற்கும் என்று நம்புவதாக கோஹோன தெரிவித்துள்ளார்.