அமைதியான முறையில் முடிவுகளை எடுங்கள் – அஸ்கிரி பீடம்.

அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் போது நாட்டின் ஸ்திரத்தன்மைக்காக கட்சி அரசியலின்றி மனசாட்சிக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு சமாதானத்தை பேணி தீர்வு காண்பது அனைவரினதும் முதன்மையான பொறுப்பு என தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நன்மை கருத்தி பல தடவைகள் விடயங்களை முன்வைத்த போதும் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக நாடு நாளுக்கு நாள் பேரழிவு நிலையை நோக்கி நகர்வதாகவும் பதிவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் அமைதியின்மையை மீண்டும் பாதிக்கும் அனைத்து காரணிகள் குறித்தும் அவதானம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews