
இலங்கையை சேர்ந்த ஏழு பேர் இன்றைய தினம் அகதிகளாக இந்தியா – இராமேஸ்வரம்பகுதியைச் சென்றடைந்துள்ளனர். இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஏழு பேர் ரூபா 2 இலட்சம் ரூபாவினை படகு ஒன்றிற்கு கொடுத்து, இன்று நண்பகல் 12 மணியளவில் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணியளவில் இந்தியாவை சென்றடைந்தனர்.
இந்தியாவை சென்றடைந்த ஏழு பேரும் வவுனியா – செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன்,இராமேஸ்வரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.