
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு தாய் நாடுகள் அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையை விட்டு விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தொடரும் அமைதியற்ற சூழல் காரணமாக தமது பிரஜைகளின் பாதுகாப்பு கருதி இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பிரித்தானியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பிரஜைகள் அத்தியாவசிய காரணங்களை தவிர இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளதுடன், இலங்கையில் நிலவும் வன்முறை போராட்டங்கள் காரணமாக பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமது பிரஜைகளை இருமுறை சிந்திக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.