இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில், நேற்று G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களிடம் மத்தியில் உரையாற்றிய ஜோர்ஜீவா, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் கணிசமாக இருளடைந்துள்ளதாகவும், நிச்சயமற்ற தன்மை அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்
சர்வதேச நாணய நிதியம் முன்னர் எச்சரித்திருந்த பாதகமான அபாயங்களை இப்போது நிறைவேறியுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைனில் போர் தீவிரமடைந்துள்ளமையானது, பொருட்கள் மற்றும் உணவு விலைகள் மீது கூடுதல் அழுத்தங்களை செலுத்துகின்றது என்றும் ஜோர்ஜீவா கூறியுள்ளார்.
உலக நிதி நிலைமைகள், முன்னர் எதிர்பார்த்ததை விட இறுக்கமடைந்து வருகின்றன. இந்தநிலையில், அதிக கடன் அளவுகள் மற்றும் கூடுதல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் எச்சரிக்கை அறிகுறியாக இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டையும் பார்க்க வேண்டாம் என்று அவர் மேலும் கூறியுள்