
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும் தொண்டு நிறுவனமான கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (கிளி பீப்பிள்) ஒன்றுகூடல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது





குறித்த நிகழ்வு 16.07.2022 சனிக்கிழமை அன்று பிரித்தானிய நேரம் 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான நிதி சேகரிப்பு நிகழ்வாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்கான வருடாந்த மதிப்பளிக்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
இதன்போது 2021 ஆம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பணிகளை முன்னேடுத்து ஒய்வு நிலை பாடசாலை முதல்வராக இருந்த உயர் திரு. எட்வேட் மரியதாஸ் ஆசிரியர் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிகழ்வில் 1000 க்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.