
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம், அவ்வாறான விளம்பரங்களை வெளியிடுபவர்கள் மற்றும் அவற்றை தயாரித்து விநியோகிப்பவர்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
இவ்வாறான நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இயங்கும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.