தென்மராட்சி மக்களுக்கான எரிபொருள் வழங்கலுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் அறிவிககப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு 1000 டோக்கண், யாழ் அரசாங்க அதிபர் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் காத்திருந்த பலருக்கு கிடைக்கவில்லை. வரிசையில் காத்திருந்தவர்களை விட முறைகேடான வகையில் அரச அதிகாரிகள் , மற்றும் இராணுவத்தினர் தமது பொக்கட்டுக்களில் இருந்து டோக்கண்களை தமக்கு வேண்டியவர்களுக்கு இரகசியமாக விநியோகித்துள்ளனர்.
இதனை அவதானித்த யாழ் பல்கலைக்களக விரிவுரையாளர் ஒருவர் குறித்த டோக்கண் ஒன்றை இராணுவத்தினரிடம் கோரியிருந்தார். ஆனாலும் குறித்த இராணுவத்தினரால் டோக்கண் விரிவுரையாளருக்கு விநியோகிக்கவில்லை.
சாவகச்சேரி IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட முறையான விநியோகத்திற்கு முரனாக பல குழறுபடிகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இன்று யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரால் குறித்த முறைகேடு கையடக்கத் தொலைபேசியில் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழறுபடிகள் தொடர்பில், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரால் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தயட்சகருக்கு முறையிடப்பட்டுள்ளதுடன், ஊடகங்களின் உதவியையும் நாடியுள்ளார்.
அரசால் பலதரப்பட்ட விதிமுறைகள் கொண்டுவரப்பட்டாலும் எரிபொருளை பாரமர மக்கள் பெற்றுக் கொள்வது பெரும் சவாலாகவே உள்ளதாக குறித்த விரிவுரையாளர தெரிவித்தார்.