மின்சார துண்டிப்பு, எரிபொருள் இன்மையால் 24 மணி நேர குடிநீர் வழங்கலில் நெருக்கடி – கிளிநொச்சி நீர் வழங்கல் சபை.

தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக
கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை
மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.
நாளாந்தம் ஏற்படுகின்ற மின்சார துண்டிப்பு மற்றும் மாற்று ஏற்பாட்டை
மேற்கொள்வதற்கான எரிபொருள் இன்மை போன்ற காரணங்களால் கடந்த காலங்கள்
போன்று 24 மணி நேரமும் நீர் விநியோகத்தை மேற்கொள்ள இயலாத நிலைமை
ஏற்பட்டுள்ளது. இதனால் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோக துண்டிப்பு
ஏற்படும்.
இதேவேளை மேற்படி நெருக்கடி நிலைமைகளால் பூநகரி நீர் வழங்கல் திட்டமானது
கிளிநொச்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அதிக தொலைவில்
இருப்பதன் காரணமாக அங்கு தேவையான நீரை விநியோகிப்பதில் ஏற்படுகின்ற
சிரமங்கள் காரணமாக தினமும் காலை 5 மணிமுதல் காலை 8 மணி வரையும் நீர் விநியோகம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள நீர் வழங்கல்
வடிகாலமைப்புச் சபையினர்.
நீர் விநியோகிப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பொது மக்கள் நீரினை
சிக்கனமாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளுமாறும்
கேட்டுக்கொண்டுள்ளனர். அத்தோடு மின்சார விநியோகம் வழமைக்குத்
திரும்புகின்ற போது குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும்
அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews