யாழ் மாவட்டத்தில் விவசாய திணைக்களம் உணவு விவசாய நிறுவனத்தின் அனுசரனையுடன் பாசிபயறு உற்பத்தியை ஊக்குவிக்க உணவு விவசாய நிறுவனம். மற்றும் வட மாகாண விசாய திணைக்களமும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகளுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஊட்டச்சத்து உட்கொள்வதனை மேம்படுத்துவதற்கு பரவலாக்கப்பட்ட பாசிப்பயறு விதைத்தலை ஊக்கிவிக்கின்றது.
கீரிமலை, அம்பன், கரவெட்டி, சண்டிலிப்பாய், உடுவில், நல்லூர், தொல்புரம், சாவகச்சேரி, உரும்பிராய், கைதடி, புத்தூர், புலோலி ஆகிய கமநல சேவை நிலையங்களில் 1250 பயறுச் செய்கைக்கான பயனாளிகளை தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
பின்வரும் பிரமாணங்களை பூர்த்தி செய்பவர்களை மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும்.
- கடந்த இரண்டு வருடங்களாக பதிவு செய்யப்பட்ட பச்சைப் பயறு விவசாயியாகவும், அடுத்து வரும் இடைப்பருவத்தில் விதைச்சலுக்கு தயாராக இருப்பவர்.
- கால் ஏக்கருக்கு கூடுதலாகவும் ஒரு ஏக்கருக்கு குறைவான அல்லது சமமான காணியை சொந்தமாகவோ அல்லது குத்தகையிலோ வைத்திருப்பவர்.
- வறுமை கோட்டிற்கு உட்பட்டவராக இருத்தல் சமுர்த்தி பயனாளியாக இருத்தல்
- பெண் பச்சைப்பயறு விவசாயிகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
- பதிவு செய்யப்பட்ட ஊட்டச்சத்துக் குறைவான பிள்ளைகள் உள்ள பச்சைப்பயறு விவசாயின் குடும்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
- 3 அல்லது 4 பிரயோகிக்கப்படாத சந்தர்ப்பத்தில் ஆகக்குறைந்த காணி வைத்திருப்பவர்களுக்கு அதிகளவு முன்னுரிமை அளிக்கப்படும்
- மாற்றுதிறனாளிகளிற்கு முன்னுரிமையளிக்கப்படும்
இது தொடர்பான மேலதிக விபரங்களிற்கு தங்கள் பகுதி விவசாய விவசாய போதனாசிரியர்களை அணுகவும் அல்லது பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பணிமனை யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொள்ளவும் என அவர் மேலும் தெரிவித்தார்.