
இலங்கை வங்கியின் பருத்தித்துறை கிளை, பருத்தித்துறை நகர்ப்பகுதியில் புதிய கட்டடத்திற்கு இன்று இடமாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பருத்தித்துறை வீரவாகு கட்டடத்தில் இயங்கி வந்த இலங்கை வங்கி கிளை இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் சுபவேளை(18) முதல் பருத்தித்துறை பிரதான வீதியில் இலக்கம் 86 எனும் இடத்தில் புதிய கட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை வங்கி பருத்தித்துறை கிளையின் முகாமையாளர் இ.இரட்ணராஜ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இலங்கை வங்கி வடமாகாண உதவிப் பொது முகாமையாளர் வ.சிவானந்தன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க, மற்றும்
இலங்கை வங்கியின் வடமாகாண செயற்பாட்டு முகாமையாளர் சி.ஆனந்தராஜா, யாழ் கிழக்கு பிரதேச முகாமையாளர் திருமதி. உ.யோகராஜசிங்கம், இலங்கை வங்கி உத்தியோகஸ்த்தர்கள், வாடிக்கையாளர்கள், வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.