போராட்டக்கள பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதி இந்த வாரம் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில், போராட்டக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்கள் தமது நிலைப்பாட்டை எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது போராட்டக்குழுக்களின் கோரிக்கைகளை தானோ அல்லது தனது கட்சியோ அல்லது தனது கூட்டணியோ ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எதிர்காலத்திலும் அது மாறாது என்றும் உறுதியளித்தார்.
காலி முகத்திடல் போராட்ட தளத்தின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் சஜித்துடன் பேச்சு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.