
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு விழா எளிமையான நிகழ்வாக வடக்கு கல்வி அமைச்சு வளாகத்தில் அமைந்துள்ள கலைவாணி ஆலய முன்றிலில் நேற்று நடைபெற்றது.
கல்வி அமைச்சுச் செயலர் திரு. இ.வரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக இந்தியத் துணைத்தூதர் ஸ்ரீமான் ராகேஷ் நட்ராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்வுகளை பண்பாட்டுத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி இராஜமல்லிகை சிவசுந்தர சர்மா ஏற்பாடு செய்திருந்தார். சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் திரு மா.அருள்சந்திரன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினர்.
நல்லூர் சாரங்கம் இசை மன்ற மாணவர்கள் – திருமதி வாசஸ்பதி ரஜீந்திரனின் நெறிப்படுத்தலில் ஆடிப்பிறப்பு பாடலைப் பாடினர். அரியாலை பிருந்தாவனம் கலை மன்ற மாணவரின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.

