
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்ற தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுவின் அடிப்படை உண்மைகளை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதிகள் காமினி அமரசேகர, ஷிரான் குணரத்ன மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு இந்த உத்தரவை பிறப்பித்தது.