
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

காணி உரிமையாளர் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் இவை அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் பொலிசாருக்கு காணி உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் இவை நேற்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
இதில் மோட்டர் செல்கள், மகசின்கள், கண்ணீர் புகைக்குண்டுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.