வழமையாக மாலை 6 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பேருந்துக்கு அதிகளவான பயணிகள் வந்து இருந்தமையால் தனது சேவையை இரு தடவையாக மாற்றி அமைத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று பிற்பகல் 6 மணிக்கு பருத்தித்துறை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து கட்டைக்காடு புறப்படுவதற்காக தயாராகிய பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணிப்பதற்க்கு காத்திருந்தமையால் பருத்தித்துறை சாலை முகாமையாளருடைய ஏற்பாட்டில் பருத்தித்துறையிலிருந்து நாகர்கோவில் வரையான பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் மீண்டும் பருத்தித்துறையில் இருந்து கட்டைக்காடு வரை சேவையில் ஈடுபட்டது .
இதனால் கட்டைகாட்ட்டிற்க்கு இரவு 8 மணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் இரவு 10 மணிக்கே சென்றுள்ளதுடன்
பயணிகள் பல அசௌகரியங்களை சந்தித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.