இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 2 நாள் பெருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சௌந்தராஜ குருக்கள் தலைமையில் சிறப்பிக்கப்பட்டது .
இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் தொடர்ந்து விசேட யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன் சுவாமி உள்வீதி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது
இன்று நடைபெற்ற 2 நாள் உற்சவ பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்
ஆடி அமாவாசை உற்சவத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும் , 28 ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.