
யாழ்.பண்ணை பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
நேற்றய தினம் நண்பர்களுடன் பண்ணை பாலத்தில் பொழுதை கழித்துக் கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து தவறி விழுந்து காணாமல்போயிருந்தார்.
இந்நிலையில் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டிருந்தபோதும் இளைஞன் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று காலை பண்ணை பகுதியிலிருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வி.கௌதமன் (வயது31) என அடையாளம் காணப்பட்டிருக்கின்றது.