மக்கள் கருத்திற்கும் நாடாளுமன்ற வாக்கு வீதத்திற்கு இடையே பாரிய இடைவெளி – புபுது ஜயகொட.

நாடாளுமன்றத்தில் வாக்கு சதவீதத்திற்கும் வெளியில் உள்ள மக்களின் கருத்துக்கும் இடையில் பல ஒளி வருட இடைவெளி இருப்பதாக சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மக்கள் சக்தி என்பது 69 இலட்சம் வாக்குகளையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தையும் பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்சவை பதவி நீக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்டது. அரசியல் அபிலாஷைகளை சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் கருத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பது ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாக நிரூபணமாகியுள்ளதாக புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் கருத்து, அரசியல் அபிலாஷைகளை சிறுமைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்திற்கு வெளியே 200 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் கேள்விகள் மற்றும் குறைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலமாக நாட்டு மக்களுக்கு நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும், , பிரச்சினைகளை தீர்க்க போராட்டம் செய்ய வேண்டியுள்ளதாகவும், அதிகாரம் மக்கள் கையில் என்ற கோசங்களை எழுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews