இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஐ.நா விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் கவலை!

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலை, நாட்டு மக்களின், மனித உரிமை விடயங்கள் மீதும், பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக, வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும், நாடுகளின் மீது கடன் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மோசமான விளைவுகளை, நாங்கள் பார்த்திருக்கின்றோம்.
கடன் நெருக்கடி, உலக நிதி அமைப்பின் ஆழமான கட்டமைப்பு இடைவெளிகளை அம்பலப்படுத்தியுள்ளது.
மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதை பாதித்துள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான எந்த முயற்சியினதும் அடிப்படையாக, மனித உரிமைகள் காணப்பட வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் சூழமைவும், அவ்வாறானதாக காணப்பட வேண்டும்.
2019 இல், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரிக்கும் கட்டமைப்பு கடன் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அந்த அறிக்கையில், நாட்டின் அதிகளவு செலவீனமாக காணப்படுவது, கடன் செலவீனமே என தெரிவித்திருந்தனர்.
இலங்கையின் வீழ்ச்சி, உலகின் கவனத்தை உடனடியாக ஈர்க்க வேண்டும்.
மனிதாபிமான அமைப்புகள் மாத்திரமின்றி, சர்வதேச நிதி அமைப்புகள், தனிப்பட்ட கடன் வழங்குநர்கள் மற்றும் ஏனைய நாடுகள், இலங்கைக்கு உதவ முன்வர வேண்டும்.
என வெளிநாட்டு கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் அட்டியா வாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews