ஜனாதிபதி வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் மொட்டுக் கட்சியை சேர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்.
அவர் தேசியப் பட்டியலில் ஒன்றரை வருடத்தின் பின்னர் வந்தவர்.
இறுதியில் அவரை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டங்களை 88, 89 காலப்பகுதியில் ஒடுக்கியதை போன்று இப்போதும் செய்யலாம் என்று நினைக்கின்றனர்.
ஆனால் அப்போது சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை.
இதனால் இப்போது ஏற்பட்டுள்ள புதிய நிலைமைகளை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆனால் இந்த நேரத்தில் ஒடுக்குமுறைகளுக்கு செல்லக்கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர்
.
இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இதேவேளை எதிர்வரும் காலங்கள் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் காலம் என்பதுடன் ஜனநாயக ரீதியிலான உரிமைகளை ஒடுக்கும் காலமாகவும் அமையும் அதற்கு நாம் முகம்கொடுக்க வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் ரணில் விக்ரமசிங்கவிடமிருந்ருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? என கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால் எம்.பிக்கள் அச்சத்திற்கு உள்ளாகினால் எதனையும் செய்ய முடியும் என்பதேயாகும்.
எம்.பிக்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்கு முதலிடம் என்றால் அதனை முன்னுக்கு வைத்து எதனையும் செய்ய முடியும்.
எனவே நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு எங்களின் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
குறிப்பாக ரஷ்யாவில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.
இன்னும் ஓர் இரண்டு வாரங்களில் அதனை நாட்டுக்கு கொண்டுவர முடியுமாகும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.