தனது முகநூல் பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக, நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னொருபோதும் இல்லாத சவால்களின் பிடியில், எங்கள் நாடு சிக்கியுள்ள தருணத்தில், அதன் ஆட்சி பொறுப்பை ஏற்கின்றார்.
இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன், இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால், இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை, ஜனாதிபதி விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என்பதில், எனக்கு சந்தேகம் இல்லை.
அவர்களின் கடுமையான அழைப்பு, மக்களின் நலனுக்கான ஆட்சிக்கானதே தவிர, தனது நலனுக்கான ஆட்சிக்கானது அல்ல.
சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நல்லாட்சி நிலவும் ஆட்சிக்கானதே.
அவர்களின் குரல்கள், ஊழல்களில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு, எந்த இடமும் அளிக்காத அரசாங்கத்திற்கானது.
இது மிகவும் கடினமான சவால்.
இதனால், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு, அரசியல், சிவில் சமூக தலைவர்கள், தீவிர பங்களிப்பை செய்ய வேண்டும்.
இது எங்கள் வரலாற்றில், தீர்க்கமான தருணம்.
இலங்கைக்கு, தங்கள் இதயத்தில், தொலை நோக்கும் தாராள மனப்பான்மையும் கொண்ட தலைவர்கள் தேவை.
என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பதை, புதிய ஜனாதிபதி நினைவில் கொள்வார்: சந்திரிக்கா குமாரதுங்க
பெரும்பான்மையான மக்களின் ஆதரவுடன், இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால், நாட்டில் மாற்றம் ஏற்பட்டது என்பதை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.