நீண்ட நாட்களுக்கு பின்னர் நெற்று இறுதி இலக்கங்களின் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது
இறுதி இலக்கங்களான 3,4,5 ஆகிய இலக்கங்களுக்கே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது. இதனை பெற்றுக் கொள்வதற்கு வடமராட்சி மக்கள் மட்டுமின்றி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகைதந்து பெற்றோலை பெற்றுச்சென்றனர்.
இதற்க்காக சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளம் வரை மோட்டார் சைக்கிள்கள் வரிசையும்,, சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமான முச்சக்கர வண்டி வரிசையும
காணப்பட்டது.சுமார் இருநூறு வரையான கார்களும் வரிசையில் நின்றன.
கரவெட்டி பிரதேச செயலரது பொறுப்பில் நெல்லியடி போலீசார் மற்றும் இராணுவத்தின் ஒழுங்குபடுத்தலில் குறித்த பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.
பெற்றோல் விநியோகத்தின் போது பிரதேச செயலகங்களால் வழங்கப்பட்ட அட்டையில் பதியப்பட்டே இவ்வாறு பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.
மோட்டார் சைக்கிளிற்க்கு ரூபா 1500ம், முச்சக்கர வண்டிக்கு ரூபா 2000 க்கும், மகிழுந்துகளுக்கு ரூபா 7000 க்கும் நிரப்பப்பட்டன.
எனினும் குறித்த பெற்றோல் விநியோகம் இரவு பத்துமணிக்கு முடிவடைந்தது.
இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் பெற்றோல் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.முன்னைய நாட்களை விட நேற்று மிக அமைதியாக விநியோகம் இடம் பெற்றது.
இதேவேளை டீசல் விநியோகம் நேற்று பிற்பகல
இரண்டு மணிக்கு பின்னர் இடம் பெற்றது. இதற்க்கு கரவெட்டி பிரதேச செயலரின் அனுமதி பத்திரத்தின் அடிப்படையில் விநியோகம் இடம் பெற்றது.இதற்காகவும் மிக நீண்ட வரிசை காணப்பட்டது.
இதேவேளை எரிபொருள் தாங்கி வந்தபோது பலத்த இராணுவ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டே இறக்கப்பட்டது குறிப்பிட தக்கது.