ஜனாதிபதி செயலகம் மற்றும் காலிமுகத்திடல் போராட்டகளம் ஆகியவற்றை இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன், மேற்படி பகுதிகளுக்குள் நுழையும் வீதிகளை முடக்கியுள்ளதாகவும் கொழும்பு செய்திகள் தொிவிக்கின்றன.
இன்றைய தினம் மாலை 2 மணிக்கு பின்னர் ஜனாதிபதி செயலகத்தை மீள ஒப்படைப்பதாக போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன்னர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பெருமளவில் குவிக்கப்பட்ட இராணுவம் ஒரு சில நிமிடங்களில் போராட்டக்களம், மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்துள்ளது.
பின்னர் கோட்டாகம போராட்டக்காரர்களால் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை இராணுவம் அகற்றியுள்ளது. மேலும் அங்கு இராணுவத்தை எதிர்த்த போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், துரத்தி துரத்தி பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொழும்பு முழுவதும் தொடர்ச்சியான பதற்றம் நிலவிக் கொண்டிருக்கின்றது.