குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஜூலை மாதம் நிறைவடைவதற்குள் இன்னும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, உலை எண்ணெய் மற்றும் பெற்றோலுடனான கப்பல் ஒன்று நேற்று இலங்கை வந்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேற்படி உலை எண்ணெய் மின் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன், உரிய தரப் சோதனைகளின் பின்னர் இந்த நடவடிக்கைகள் நடைபெறும் என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாகன இலக்கத்தட்டின் இறுதி இலக்க முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், தேசிய எரிபொருள் அட்டைக்கான ஞசு குறியீடு சரிபார்ப்பு மற்றும் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
3,800 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!
3,800 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று சற்று முன்னார் நாட்டை வந்தடைந்துள்ளது.