![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-45e18bc43396a7e3ab52e5fe86e3d683-V-768x576-1-768x490.jpg)
சுகாதார நடைமுறைகளை பேணாது விளையாட்டு நிகழ்வு நடாத்திய இரண்டு சன சமூக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு அதன் நிர்வாகிகளும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-e7dc2db236dfdf1689f3fe56ce4d3b27-V-768x576-1-300x225.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/08/IMG-45e18bc43396a7e3ab52e5fe86e3d683-V-768x576-1-300x225.jpg)
பொது சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைகளை மீறி விளையாட்டு நிகழ்வை நடாத்தியதாலேயே இவ்வாறு நிர்வாகிகள் தனிமைப்படுத்தப்பட்டு குறித்த இரண்டு சன சமூக நிலையங்களும் எதிர்வரும் 22 ம் திகதிவரை இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை புலோலி வடக்கு மற்றும் வட மேடைக்கு சனசமூக நிலையமும் அதன் நிர்வாகிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் தலைவர்களுக்கு எதிராகவும் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன, இதில் பருத்தித்துறை போலீசார், கிராம சேவகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.