
சட்ட விரோத மணல் மண்ணை ஏற்றிக் கொண்டு சென்ற கன்ரர் ரக வாகனம் தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து போன்றவற்றை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் வடமராட்சி மந்திகை மடத்தடி சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றித் மேலும் தெரியவருவதாவது,





பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியூடாக அனுமதியற்ற மணல் மண் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து போன்றவற்றை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் டீசலைப் பெறுவதற்காக பயணம் செய்த பருத்தித்துறை தனியார் சேவை சங்க பேருந்தும், பருத்தித்துறையிலிருந்து கொக்குளாய் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் சேதமடைந்துள்ளது.
இதில் ஆட்கள் எவருக்கும் எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை. எனினும் நெல்லியடி போலீசார் குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அண்மையில் நெல்லியடி மாலிசந்தி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா அன்று சட்டவிரோதமான மணல் மண் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகனம் ஒன்றை கைப்பற்றுவதறக்காக பருத்தித்துறை போலீசாரால் கலைத்து சென்ற வேளை தேர் திருவிழாவிற்க்கு சென்றிருந்த ஐவரை மோதித்தள்ளிய நிலையில் இருவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதுடன் முறித்த பகுதி அதிகமான விபத்துக்கள் ஏற்படுவது குறிப்பிடதக்கது.