முல்லைத்தீவு மாவட்டதின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எல்லைக் கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த மக்கள் சுமார் 1 மாத காலமாக எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாது இருந்தனர்.
இந்த நிலையில் ஒட்டுசுட்டாள் உதவி பிரதேச செயலாளர் ரமேஸ் அவர்களின் கண்காணிப்பில் 7 கிராமங்களிற்கு பார ஊர்திகள் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையமூடாக எரிபொருள் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கூட்டுறவு முகாமையாளர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டனர்.
கிராமங்களிற்கான நேரம் ஒதுக்கப்பட்டு சீரான ஒழுங்குபடுத்தலில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது.