
நாட்டில் உள்ள எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அடுத்த 30 நாட்களுக்கு போதுமான டீசல் கையிருப்பில் உள்ளதாக அவ் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 22 நாட்களுக்கு போதுமான பெற்ரோலும் கைஇருப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் திட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக அகில இலங்கை பெற்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளுக்கான வரிசைகளும் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.