யாழ் கல்வியங்காடு எரிபொருள் நிலையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எரிபொருளுக்காக காத்திருந்தவர்களுக்கும் கோபாய் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கும் இடையிலே ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது நல்லூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட கழியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் வாகனங்களுக்கு டீசல் பெறுவதற்காக சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நின்றது.
குறித்த வரிசையில் நின்ற அநேகமான வாகனங்கள் எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லாமல் தமக்கான எரிபொருளை வழங்குமாறு கோரிய நிலையில் பொலிசாருக்கும் வாகன சாரதிகளுக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த வாகன சாரதிகள் தாங்கள் கிராம சேவையாளர் இடம் சென்று தமது வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கான பங்கீட்டு அட்டையை தருமாறு கோரியும் தமக்கு வழங்கப்படவில்லை.
நாம் கேட்டதற்கு கிராமசேவையாளர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த எரிபொருள் பங்கீட்டு அட்டை தமக்கு கிடைக்கும் எனவும் அதன் பின்னே வழங்க முடியும் என தெரிவித்ததாக தெரிவித்தனர்.
மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்ட வாகன இலக்கத்துக்கு எரிபொருளை வழங்குமாறு கோரியும் தமக்கு வழங்க முடியாது என எரிபொருள் நிலையத்தினரும் பொலிசாரும் மறுத்ததாகத் தெரிவித்தனர்.
இதான் போது பொலிசாருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் இடையில் கடுமையான வாய் தர்க்கம் ஏற்பட்ட நிலையில் குறித்த கூட்டத்தில் இருந்த ஒருவரை பொலிசார் சட்டையில் பிடித்து அடித்தனர்.