எரிசக்தியின் அதிகாரத்தை வெளிச்சக்திகளுக்கு வழங்குவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் எரிசக்தியை முகாமைத்துவப்படுத்தும் செயற்பாட்டு ரீதியான அதிகாரத்தை வெளிநாடுகளுக்கு வழங்கி, நாட்டின் மின்விளக்கு சுவிட்சை வெளிநாடுகளிடம் ஒப்படைப்பதன் மூலம் நாட்டை இருளில் மூழ்கடிக்கும் நிலையே ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டின் எரிசக்தி கட்டமைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையிலான புதிய மின்சாரக் கொள்கையை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஆனால் பெரும்பாலானோர் விற்பனை செய்து அல்லது தனியார் மயமாக்குவதையே செய்த வண்ணமுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவை இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சார சபை ஒரு தேசிய வளம் என்பதோடு அதைப் பாதுகாத்த வன்னம் முன்னேற்றுவதும், அதிக இலாபம் ஈட்டுவதற்கு தேவையான திட்ட வரைவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் முறையான மின்சார உற்பத்தி செயன்முறையை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews