காலி முகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் எதிர்வரும் புதன்கிழமை (27) இடம்பெறவுள்ளது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம், ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இந்தத் தாக்குதல் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தை கூட்டுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதும் நடைமுறையில் கடினமானது என்பதால், அவசரகால சட்ட வர்த்தமானி அறிவித்தலை நிறைவேற்றுவதற்காக எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றம் கூடும்போது இதே விடயத்தை விவாதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.