முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய வெளிநாட்டு அமைப்பு முஸ்தீபு..!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்யக்கோரி தென்னாபிரிக்க அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அவரின் செயற்பாடுகள் குறித்த இதில் குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் உள்நாட்டுப் போரின்போது செயற்பட்ட விதத்தின் அடிப்படையில்

அவரைக் கைது செய்யுமாறு கோரி தென்னாபிரிக்காவைச் சேர்ந்த அமைப்பு ஒன்றின் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, ​​அன்றைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜெனிவா ஒப்பந்தங்களை கடுமையாக மீறியதாக முறைப்பாட்டைத் தாக்கல் செய்த “சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம்” என்ற குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews