தேசிய எரிபொருள் அட்டையின் QR முறைமை இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தல் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வாகன பதிவெண் அடிப்படையில் நேற்று எரிபொருள் வழங்கப்பட்ட போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் கிடைக்காததால் பல பிரதேசங்களில் உள்ள மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட QR முறை சோதனை நடவடிக்கை வெற்றியடைந்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 4,708 வாகனங்களைப் பயன்படுத்தி தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரம் பரிசோதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.