
யாழ்.அளவெட்டி – நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய ஒருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.