
வடமராட்சியில் நேற்றைய தினம் நெல்லியடி, மற்றும் குஞ்சர்கடை ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கியூ ஆர் கோட்டிற்க்கும் பெற்றோல் வழங்கல் இடம் பெற்றது.
நேற்று பிற்பகல் 4:00 மணிக்கு பின்னரே இவ் விநியோகங்கள் இடம் பெற்றன.

கியூ ஆர் கோட் மூலம் உறுதிப்படுத்தல் மற்றும் தரவேற்றம் செய்யப்பட்டு, பிரதேச , செயலரால் வழங்கப்பட்ட அட்டையிலும் பதிவு செய்யப்பட்டே பெற்றோல் விநியோகம் இடம் பெற்றது.
கியூ ஆர் கோட் இல்லாதவர்களுக்கு பிரதேச செயலரால் வழங்கப்பட்ட அட்டைக்கு ரூபா 1500/- வீதமும் கியூ ஆர் கோட் உள்ளவர்களுக்கு 1800/- வீதமும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படன.அதே வேளை முச்சக்கர வண்டிகளுக்கு 2250 ரூபாவுக்கும் வழங்கப்பட்டன. இவ் விநியோகம் கரவெட்டி பிரதேச செயலர் திரு தயாரூபான் கண்காணிப்பில் பிரதேச செயலக ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதேவேளை நேற்றைய தினம் பருத்தித்துறை கொட்டடி எரிபொருள் நிரப்பு நிலையத்திலும், வல்வெட்டித்துறை ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் பெற்றோல் விநியோகம் பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட அட்டைகளுக்கு வநியோகம் இடம் பெற்றது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் ஆ.சிறி கண்காணிப்பில் அவரது செயலக ஊழியர்கள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குறித்த ஊறணி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் குறித்த பகுதியில் நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதானா வைத்தியசாலைக்கு செல்ல வேணஸடியவர்களுக்கான முச்சக்கர வண்டிக்கு தேவையான பெற்றோல் அவரது மனிதாபிமான அடிப்படையில் பலருக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீனவர்களுக்கு தலா ஒவ்வொரு லீட்டர் பெற்றோல் வழங்கப்பட்ட போதிலும் பலருக்கு வழங்கப்படாமல் முன் அறிவிப்பின்றி வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் அறிவிப்பின் பெயரில் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
.குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய பகுதியில் வீதி ஒழுங்கு, பாதுகாப்பு, மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை போலீசாரும் இராணுவத்தினரும் வழங்கிவருகின்றனர். நேற்றைய தினம் எரிபொருள் விநியோகம் மிக சுமுகமாக இடம் பெற்றது.
ஆனாலும் பல இடங்களில் நேற்று பெற்றோல் பெறுவதற்காக நேற்று முன்தினமிருந்து மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தன
இதே வேளை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலைய சூழலில் நான்கு நாட்களாகவும், நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையை சூழலில் மூன்று நாட்களாகவும், ஊறணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மூன்று நாட்களாகவும் டீசலை பெறுவதற்கு டீசல் வாகனங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் காத்திருக்கின்றனர்.