
வரிசையை குழப்பி தவறான இலக்கத்தில் நிரப்பட்டவரின் பெற்றோலை மீளப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வடமராட்சி குஞ்சர்கடை உடுப்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
நேற்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் கடமையில் ஈடுபட்ட போதிலும் தவறான இலக்கத்தில் ஒருவர் எரிபொருளை நிரப்பியுள்ளார். இதுதொடர்பாக பொது மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு கரவெட்டி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து அவரின் பணிப்பின் பேரில் குறித்த பெற்றோல் மீளப் பெறப்பட்டது. இது தொடர்பாக கரவெட்டி பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்த்தர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.