கிழக்கு இலங்கையின் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், பல் துறைக் கலைஞருமான கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் இறுதி கிரியைகள் நேற்று இடம்பெற்றிருந்தன.
கடந்த 25ம் திகதி காலமான அவரின் இறுதி கிரியைகள் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது. கலைக்கோட்டன் , கலாபூஷணம், இலக்கியச் செம்மல் என கெளரவப் பெயர் கொண்டு அழைக்கப்படும்அழகையா இருதயநாதன் அவர்கள் கலைத்துறைக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.
கவிதை, சிறுகதை, இலக்கியம் , நாடகம் ,சினிமா கூத்துக்கலை, குறும் திரைப்படம் என எல்லா துறைகளிலும் கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்கள் சரளமானவர்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய அவர், மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் மாவட்ட ஆணையாளராகவும் செயற்பட்டிருந்தார்.
காலம்சென்ற கலைக்கோட்டன் அழகையா இருதயநாதன் அவர்களின் இறுதி கிரியை நிகழ்வில் சாரணர் சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.