ஜனநாயக ரீதியான போராட்டக்காரர்களை தண்டனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாவும் ஜனநாயக நாட்டுக்காக போராடிய போராட்டக்காரர்களை பின்தொடர்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் போராட்ட செயற்பாட்டாளர்கள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனையின் மூலம் சர்வதேசத்திற்கு செல்லும் செய்தி மிகவும் ஆபத்தானது என்றும் இந்த அபகீர்த்தியினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைவிட நாட்டின் ஒட்டுமொத்த மக்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் வலியுறுத்தினார்.