பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் தேவையுடைய மக்களுக்கு உணவளிப்பதற்கான ஓர் மனிதாபிமான முயற்சி எனும் கருப்பொருளில் கிழக்கு சமூக அபிவித்தி மையம் முன்னெடுத்து வரும் செயல்திட்டத்தின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் விசேடதேவையுடையவர்கள் , பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான உலர்வுணவுகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்கு வகையில் கிழக்கு சமூக அபிவித்தி மையத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட குடும்பங்களுக்கான இடர்கால நிவாரண உலர்வுணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன .
கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் புஹாரி மொகமட் தலைமையில் மட்டக்களப்பு நகர் காந்தி பூங்கா முன்றலில் இடம்பெற்ற உலர்வுணவு பொதிகளும் வழங்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் ,உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ்வரன் . மாநகர சபை உறுப்பினர்களான சசிகலா ,கௌரி ஆகியோர் கலந்துகொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர் .
இந்நிகழ்வில் கிழக்கு சமூக அபிவித்தி மையத்தின் உத்தியோகத்தர் உட்பட பயனாளிகள் கலந்துகொண்டனர்