சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் உதவிகள்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல்.

சீனாவிடம் இருந்து மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் மேலும் இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட இரண்டு 500 மெட்ரிக் டன் அரிசி தொகுதிகள் ஜூலை 16 மற்றும் 19 ஆம் திகதிகளில் கொழும்பை வந்தடைந்துள்ளன.

‘இதுவரை, பாடசாலை உணவுத் திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் உள்ள 7,900 பாடசாலைகளில் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கு 3,000 மெட்ரிக் டன் அரிசி கல்வி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், சீனாவிடம் இருந்து நன்கொடையாக 1,000 மெட்ரிக் டன் அரிசி இம் மாதம் ஜூலை 24 அன்று கொழும்பிற்கு வந்தடைந்திருந்தது.

சீனாவில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட சுமார் 1,000 மெட்ரிக் டன் அரிசி, பாடசாலை செல்லும் குழந்தைகளைக் கொண்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவிடம் இருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு கிடைக்கும் உதவிகள்: சீன தூதரகம் வெளியிட்ட தகவல் | Continued Aid To Sri Lanka From China Colombo

அதன்படி, 7,925 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1,080,000 குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.

இவ் உதவி திட்டம் 100 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட  கிராமப்புறங்கள் மற்றும் தோட்டத் துறையைச் சேர்ந்த பாடசாலைகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு நன்மையாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews