
சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலி – பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞன் போதைப்பொருளுக்கு அடிமையாகிய நிலையில் அண்மையில் இருதயத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு சிகிச்சையளித்து மருத்துவர்களினால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கடந்த திங்கள் கிழமை மீளவும் ஊசிமூலம் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்புக்கு போதைப்பொருளினால் இருதயத்தில் ஏற்பட்ட கிருமித்தொற்றுதான் காரணம் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது