இரு நிபந்தனைகளுடன் 10 தொடக்கம் 26 வருடங்கள் தொடர்ச்சியாக சிறை வாசம் அனுபவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கடிதத்தில் தொடர்ச்சியாக 26 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசிகள் கைதிகள் 46 பேர் உள்ளனர். அவர்களில் 26 பேர் மேன்முறையீடு செய்யப்பட்ட அரசியல் கைதிகளாகவும் 22 பேர் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளாகவும் காணப்படுகின்றனர்.
ஜனாதிபதி தெரிவின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் நேரடியாக ஆதரவு வழங்கிய நிலையில் அதன் போதும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசியல் கைதிகள் 46 பேரையும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யவோ அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்ய ஜனாதிபதியிடம் விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.