
வடமராட்சி புலோலி மேற்கு முருகன் கோவிலடி அறிவகம் சனசமூக நிலையத்தின் 67 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் விளையாட்டுப் போட்டிகளும் நேற்றைய தினம் (28/07/2022) பிற்பகல் 3 மணியளவில் அறிவகம் சனசமூக நிலையத்தின் தலைவர் ம.தனுஷன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக குறித்த விழாவிற்கு சமூகமளித்திருந்த சிறப்பு கௌரவ விருந்தினர்கள் முருகன் ஆலய வீதி முன் பகுதியில் இருந்து மைதானம் வரை மாலை மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்

தொடர்ந்து அறிவகம் சனசமூக நிலையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சிறப்பு பிரதம கௌரவ விருந்தினர்களின் மங்கள விளக்கேற்றலுடன் குறித்த நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து இரண்டு இல்லங்களாக பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் பழைய மாணவர்கள் கிராம மக்களிற்க்கான கயிறிழுத்தல், சங்கீத கதிரை, நாடுகடத்தல் போன்ற போட்டிகளும் இடம் பெற்றது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன


சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், ஓய்வுபெற்ற கிராம சேவகர் பொ.தயாசிறி, ஆகியோரும்


கௌரவ விருந்தினர்களாக புலோலி வட மேற்கு கிராம அலுவலர் வ.சிவபரன், வடமேற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ஸ்ரீசங்கர் எமிலா கொன்சிலா, பருத்தித்துறை சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ப.யோகராஜா, ஹாட்லி கல்லூரி அதிபரும் நிலைய உறுப்பினருமாகிய க.வாணி முகுந்தன் உட்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.


இந் நிகழ்விற்கு குறித்த கிராம மக்கள், அயல் கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.