
அரசியலமைப்பின் படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 3ஆம் திகதி முற்பகல் 10.30க்கு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.