இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறைப்பாடு.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால், மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக சட்டத்தரணி நுவான் போபகே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜூலை 22ஆம் திகதி கோட்டகோகமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும், ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதற்கு இலங்கை இராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தவர்கள் யார் என்பது குறித்து ஆராயுமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி வருகிறார். எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இந்த விடயத்தில் தலையிட்டு, மக்களுக்கு எதிரான அவசரகால சட்டத்தை, பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews