வடக்கின் புதிய ஆளுநராக டி எம் சுவாமிநாதன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் ஆளுநர் மாற்றங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் மட்டும் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் கட்சியை வளர்ப்பதற்காக ஆளுநர் பதவிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அமர்த்துவதற்கான யோசனைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவரின் நெருங்கிய தரப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்னாள் அமைச்சர் டி எம் சுவாமிநாதன் உள்ளடங்களாக ஐவருடைய பெயர்கள் பருந்துரைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்தது.
எனினும் தற்போதைய சூழ்நிலையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை இடம் பெற்று வருகின்ற நிலையில் சில வேளை ஆளுநர் மாற்றம் பிற்போடப்படலாம் எனவும் நம்பந்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிய கிடைத்தது