வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தின் 15 வது ஆண்டு விழா இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச கேட்போர் கூடத்தில் அதன் வடமராட்சி கிழக்கு நிர்வாகியும் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் வ.தவராசா தலமையில் பிற்பகல் 3:00 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரும், பிரதம விருந்தினருமாகிய க.பிரபாகரமூர்த்தி, வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தின் செயலாளர் க.பாஸ்கரன், வடமராட்சி கிழக்கு கோட்டக்கல்வி அதிகாரியும், சிறப்பு விருந்தினருமான சிறிராமசந்திரன்,
மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி தினகரன், வெற்றிலைகேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபரும் வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய செயற்பாட்டாளருமான திரு செல்வக்குமார், ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து தலமை உரையினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரும் வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய செயற்பாட்டாளருமான வ.தவராசா நிகழ்த்தியதை தொடர்ந்து கருத்துரைகளை நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான வடமராட்சி கிழக்கு கோட்ட கல்வி அதிகாரி சிறிராமசந்திரன், வெற்றிலை கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபரும் வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய செயற்பாட்டாளருமான திரு.செல்வக்குமார், வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய செயலாளர் க.பாஸ்கரன், சித்த வைத்திய அதிகாரி சிவனேசன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.பிரபாகரமூர்த்தி, ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து சமூகமளித்தோருக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.