
யாழ்.மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல்கள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். அரசாங்க அதிபரை சந்தித்து நேற்று கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது எரிபொருள் நெருக்கடியினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், அதனை தீர்த்து வைக்க வேண்டும் என்பது குறித்தும் இது தொடர்பில் தாம் அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.